உடற்பயிற்சி என்பது உடலுக்கு மட்டும் பயிற்சி தரக்கூடியதாக இருக்க கூடாது. மனதுக்கும் பயிற்சி தரக்கூடியதாக இருக்க வேண்டும். அப்போதுதான் அந்தப் பயிற்சிகளின் மூலம் கிடைக்கும் ஆரோக்கியமும் பலனளிக்கும் என்பதை உணர்ந்தவர் கள் நம் முன்னோர்கள். அந்த வகையில் இந்த எட்டுவடிவ நடைபயிற்சியை வர்ம நடைபாதை பயிற்சி என்று அழைக்கலாம். நமது உடலில் இருக்கும் வர்மபுள்ளிகள் அதிகளவு உள்ளங்காலில் நிறைந்திருக்கிறது. இந்த 8 வடிவ நடைபயிற்சியை வெற்று காலில் செய்யும் போது கூழாங்கற்கள் மீது நடக்கும் போது அந்தப் புள்ளிகள் தூண்டப்பட்டு உடலில் உள்ள வர்மப் புள்ளிகளின் ஆற்றலை அதிகரிக்கிறது.
உச்சி முதல் உள்ளங்கால் வரை உள்ள அனைத்து நோய்களுக்கும் சிறந்த மருந்தாக விளங்குகிறது. பெண்களின் மாதவிடாய் பிரச்சனையை சரி செய்கிறது. ஞாபக சக்தி அதிகரிக்கிறது. இளமையை மீட்டுத் தருகிறது. உடல் உள்ளுறுப்புகளை சீராக இயக்குகிறது. மனம், புத்தி, உடல் மூன்றையும் சமநிலையில் வைத்து நமது ஆரோக்கியத்தை மேம்படுத்தி நாம் மகிழ்ச்சியாக வாழ 8 நடை உதவுகிறது.
மண் தரை, சிமெண்ட், வீட்டின் அறை, வீட்டு மொட்டை மாடி, தோட்டத்திலும் அருகில் இருக்கும் மைதானத்திலும் கூட இதைச் செய்யலாம்.
8 Walk Followers
Days crossed